மத்திய அரசின் அதிரடி வரி உயர்வு ஐடிசி பங்குகள் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்

மத்திய அரசின் அதிரடி வரி உயர்வு ஐடிசி பங்குகள் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்

புகையிலை மற்றும் சிகரெட் பொருட்கள் மீது புதிய கலால் வரியை மத்திய நிதியமைச்சகம் அறிவித்ததை அடுத்து, ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் இந்த வரி, தற்போதைய 40 சதவீத ஜிஎஸ்டி-யுடன் கூடுதலாக வசூலிக்கப்படும். இந்த அறிவிப்பால் ஐடிசி பங்குகள் சுமார் 5 சதவீதம் சரிந்து, 52 வாரங்களில் இல்லாத அளவாக ₹345-க்கு கீழ் சென்றன. இதன் காரணமாக ஒரே நாளில் நிறுவனத்திற்கு ₹18,104.35 கோடி சந்தை மதிப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது.

சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து 1,000 சிகரெட்டுகளுக்கு ₹2,050 முதல் ₹8,500 வரை வரி விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஒரு சிகரெட்டின் விலை ₹2 முதல் ₹3 வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐடிசி நிறுவனத்தின் வருவாயில் பெரும் பகுதி சிகரெட் வணிகத்திலிருந்தே வருவதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். இருப்பினும், நிறுவனத்தின் எஃப்எம்சிஜி மற்றும் ஹோட்டல் துறை வணிகங்கள் நீண்ட கால அடிப்படையில் இந்த இழப்பை ஈடுகட்ட உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *