மக்களின் கடற்கரை திருமண கனவை நனவாக்க தமிழக அரசு கொண்டு வந்த அதிரடி திட்டம்

மக்களின் கடற்கரை திருமண கனவை நனவாக்க தமிழக அரசு கொண்டு வந்த அதிரடி திட்டம்

தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மாமல்லபுரத்தில் குறைந்த செலவில் ‘பீச் வெட்டிங்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பராமரிப்பு கட்டணமாக வெறும் 10,000 ரூபாய் செலுத்தி இனி கடற்கரையில் பிரமாண்டமாகத் திருமணம் செய்யலாம். சைவ உணவிற்கு 700 ரூபாயும் அசைவத்திற்கு 1,100 ரூபாயும் ஒரு நபருக்குக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் ரிசார்ட்டுகளுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டத்தில் தங்குவதற்கு 5,000 ரூபாயில் அறைகளும் கிடைக்கும். மேடை அலங்காரம் மற்றும் மின் விளக்கு ஏற்பாடுகளைப் பொதுமக்கள் தங்கள் விருப்பப்படி செய்துகொள்ளலாம். நடுத்தர மக்களும் கடற்கரையோரம் கோலாகலமாகத் திருமணம் நடத்த இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *