மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்திற்கு முடிவு புதிய சட்டத்தின் கீழ் 125 நாட்கள் வேலை
December 16, 2025

மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பதிலாக ‘விக்சித் பாரத் – ஜி ராம் ஜி’ என்ற புதிய மசோதாவை கொண்டு வருகிறது. இதன் மூலம் வேலை நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்தப்படும். இத்திட்டத்திற்கான செலவை மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும் புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது.
விவசாயப் பணிகளின் போது தொழிலாளர் தட்டுப்பாட்டை தவிர்க்க, ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 60 நாட்கள் வரை இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்கள் தங்கள் சொந்த நிலங்களிலும் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். டிஜிட்டல் வருகைப்பதிவு மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட ஊதியம் போன்ற அம்சங்கள் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.