பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது கடலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் ரகசிய ராஃப்ட் கண்டுபிடிப்பு

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது கடலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் ரகசிய ராஃப்ட் கண்டுபிடிப்பு

பெர்முடா தீவுகளுக்கு அடியில் சுமார் 20 கிலோமீட்டர் தடிமன் கொண்ட ஒரு விசித்திரமான பாறை அடுக்கு இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக எரிமலைகள் குளிர்ந்த பிறகு தீவுகள் கடலில் மூழ்கிவிடும், ஆனால் இந்த தனித்துவமான அடுக்கு பெர்முடாவை 3 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக கடல் மட்டத்திற்கு மேல் மிதக்க வைக்கிறது. இது உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படாத ஒரு அபூர்வ புவியியல் மாற்றமாகும்.

கார்னகி சயின்ஸ் மற்றும் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்ததில் இந்த ரகசிய அடுக்கு ஒரு ‘ராஃப்ட்’ போல செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கப்பல்கள் மற்றும் விமானங்கள் மாயமான கதைகளுக்கு அப்பால், இந்த 20 கிமீ தடிமனான பாறையே உண்மையான அறிவியல் மர்மமாக கருதப்படுகிறது. நிலத்தடியில் ஏற்பட்ட இந்த மாற்றம் பெர்முடா தீவை கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரத்தில் நிலையாக நிறுத்தி வைத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *