போர் நிற்குமா அல்லது தீவிரமாகுமா அமெரிக்கா செல்லும் ஜெலென்ஸ்கி எடுக்கப்போகும் அந்த முக்கிய முடிவு

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், டிசம்பர் 28 அன்று அமெரிக்காவில் நடைபெறவுள்ள சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. உக்ரைனின் கைப்பற்றப்பட்ட பகுதிகளை விட்டுத்தர புடின் மறுப்பதால் அமைதி பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. சமீபத்திய தாக்குதல்களால் உக்ரைன் மக்கள் இருளில் வாடும் நிலையில், அதிபர் ஜெலென்ஸ்கி டொனால்ட் ட்ரம்ப்பை நேரில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வு குறித்து முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளார்.
சுமார் 90 சதவீத அமைதி ஒப்பந்தம் தயாராக உள்ளதாகவும், மீதமுள்ள 10 சதவீத முரண்பாடுகளை களையவே இந்த சந்திப்பு என்றும் கூறப்படுகிறது. புத்தாண்டு பிறப்பதற்குள் போரை முடிவுக்கு கொண்டுவர ஜெலென்ஸ்கி சில விட்டுக்கொடுப்புகளுக்கு சம்மதிப்பாரா அல்லது மோதல் உச்சக்கட்டத்தை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சந்திப்பு உக்ரைனின் வெற்றி மற்றும் அமைதிக்கான ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்று ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.