அமெரிக்கா இல்லை இந்த முஸ்லீம் நாடுதான் அதிகப்படியான இந்தியர்களை வெளியேற்றியுள்ளது

இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளியேற்றப்படுவதில் அமெரிக்காவை விட சவுதி அரேபியா முதலிடத்தில் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 18 அன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவை விட சவுதி அரேபியாவிலிருந்துதான் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். விசா காலம் முடிந்த பிறகும் தங்குதல் மற்றும் தொழிலாளர் சட்ட மீறல்கள் போன்ற காரணங்களால் சவுதி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் சவுதி அரேபியா பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை திருப்பி அனுப்பியுள்ளது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டில் மட்டும் 11,486 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர் அதே சமயம் அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. முறையான வேலை அனுமதி இல்லாமை மற்றும் தங்குமிடம் தொடர்பான விதிகளை மீறுபவர்கள் மீது சவுதி அதிகாரிகள் மேற்கொண்டு வரும் தீவிர சோதனையே இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.