போபாலில் மாணவியை கடத்தி நான்கு கார்களில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது
February 13, 2026
போபாலில் பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவரை மர்ம நபர்கள் கடத்தி நான்கு வெவ்வேறு கார்களில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிப் கான் மற்றும் மாஸ் கான் ஆகிய இரு இளைஞர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று இந்த கொடூரத்தை அரங்கேற்றியதோடு, அதை வீடியோ எடுத்து பிளாக்மெயிலும் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புகாரின் அடிப்படையில் போபால் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தனர். தப்பியோட முயன்ற ஆசிப் மற்றும் அவனது நண்பன் மாஸ் கானை போலீசார் கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சொகுசு கார்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.