ஜோதிடரின் பேச்சை கேட்டு தூங்கிக்கொண்டிருந்த தாயை தலையணையால் அழுத்தி கொன்ற மகள்
February 13, 2026

கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் ஜோதிடர் ஒருவரின் தவறான ஆலோசனையை நம்பி பெற்ற தாயையே மகள் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தனது தந்தையின் மரணத்திற்கு தாயின் ‘பில்லி சூனியம்’ தான் காரணம் என ஜோதிடர் கூறியதை நம்பிய சுசித்ரா, கடந்த வியாழக்கிழமை தூங்கிக்கொண்டிருந்த தாய் புஷ்பவதியை தலையணையால் அழுத்தி கொலை செய்தார்.
இயற்கை மரணம் எனக்கூறி உடலை அவசரமாக தகனம் செய்ய முயன்றபோது, கிராம மக்களின் புகாரால் போலீசார் உடலை மீட்டனர். விசாரணையில் சுசித்ரா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த கொடூர கொலையில் சுசித்ராவின் கணவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து கியாட்சந்திரா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.