பெங்களூரு பிஜி விடுதிகளில் உணவுக்கட்டுப்பாடு மற்றும் மெனுவில் அதிரடி மாற்றம்

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெங்களூரு பிஜி (PG) விடுதிகளில் தங்கியுள்ள லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிவாயுவைச் சேமிக்க வார நாட்களில் (திங்கள் – வெள்ளி) மூன்று வேளை உணவிற்குப் பதிலாக இரண்டு வேளை மட்டுமே உணவு வழங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. வார இறுதி நாட்களில் வழக்கம் போல் மூன்று வேளை உணவு வழங்கப்படும்.
அதிக எரிவாயு தேவைப்படும் தோசை, பூரி மற்றும் சப்பாத்தி போன்ற உணவுகள் தற்காலிகமாக மெனுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக லெமன் ரைஸ் போன்ற அரிசி வகை உணவுகள் மற்றும் குறைந்த நேரத்தில் தயாராகும் உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், சமையலுக்கு மின்சார சாதனங்களைப் பயன்படுத்தவும், நெருப்பில்லா சமையல் முறைகளைப் பின்பற்றவும் விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.