புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோயா? இதோ அதிர்ச்சியூட்டும் பின்னணி காரணங்கள்!

புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோயா? இதோ அதிர்ச்சியூட்டும் பின்னணி காரணங்கள்!

புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களும் தற்போது நுரையீரல் புற்றுநோய் அல்லது COPD போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது அபாயகரமான அளவில் அதிகரித்துள்ள காற்று மாசுபாடு.

சுற்றுப்புறத்தில் உள்ள நச்சுக்காற்று, பிறர் புகைபிடிக்கும் போது வெளியேறும் புகையை சுவாசிப்பது (Passive Smoking) மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வேதிப்பொருட்கள் கலந்த தூசுகள் நுரையீரலின் திசுக்களைப் பெருமளவில் சேதப்படுத்துகின்றன. இது தவிர, காற்றோட்டம் இல்லாத அறைகளில் சமைக்கும் போது வெளிப்படும் புகை மற்றும் மரபணு ரீதியான காரணங்களும் இந்த ஆபத்தை பல மடங்கு அதிகரிக்கின்றன.

நிபுணர்களின் எச்சரிக்கை:

  • இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடரும் இருமல்.
  • நெஞ்சு வலி அல்லது மூச்சு விடுவதில் சிரமம்.

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். முகக்கவசம் அணிவது மற்றும் வீடுகளில் போதிய காற்றோட்ட வசதியை உறுதி செய்வது உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும். ஆரம்பக்கால பரிசோதனையும் முறையான விழிப்புணர்வுமே உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *