பீட்சா தயாரிக்கும் ரகசிய வித்தையை கையாண்டு கிரிக்கெட் உலகில் சாதனை படைக்கும் இத்தாலிய வீரர்

பீட்சா தயாரிக்கும் ரகசிய வித்தையை கையாண்டு கிரிக்கெட் உலகில் சாதனை படைக்கும் இத்தாலிய வீரர்

இலங்கையில் பிறந்த கிரிஷன் கலுகாமகே காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் கனவை இழந்தாலும் மனம் தளரவில்லை. பீட்சா மாவை உருட்டும் தனது தனித்துவமான கை நுணுக்கத்தை லெக் ஸ்பின்னிற்கு பயன்படுத்தி நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இத்தாலியின் வரலாற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் இப்போது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

வறுமையின் காரணமாக பீட்சா கடையில் வேலை செய்தாலும் கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் பல சவால்களை எதிர்கொண்டார் கிரிஷன். இத்தாலிய கேப்டன் ஹாரி மானென்டி அவரை ஒரு போராளி என்று புகழ்கிறார். பீட்சா தயாரிக்கும் போது பழகிய அந்த மணிக்கட்டு சுழற்சி இப்போது உலகத்தரம் வாய்ந்த பேட்டர்களை திணறடித்துக் கொண்டிருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *