பஹ்ரைனில் அமெரிக்க கடற்படைக்கு செக் வைத்த ஈரான்
March 9, 2026

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை தளத்திற்கான எரிபொருள் விநியோகத்தை ஈரான் முடக்கியுள்ளது. அமெரிக்காவின் சப்ளை செயினை உடைக்கும் நோக்கில் அந்நாட்டின் முக்கிய எரிபொருள் ஆதாரமான பாப்கோ சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் கடற்படை தளம் தற்காலிகமாக செயல்பட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹர்முஸ் நீரிணையை பாதுகாக்கும் பொறுப்பு இந்த தளத்திற்கு உண்டு. நேரடி போரை தவிர்த்து அமெரிக்காவின் பொருளாதார மற்றும் எரிபொருள் ஆதாரங்களை சிதைப்பதே ஈரானின் தந்திரமாக உள்ளது. இந்த தாக்குதலால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என பஹ்ரைன் அறிவித்தாலும் பிராந்தியத்தில் ஈரானின் கை ஓங்கி வருவதாகவே தெரிகிறது.