சிபிஐ அனுப்பிய 3வது சம்மன் குறித்து அதிரடி முடிவெடுப்பாரா தவெக தலைவர் விஜய்

சிபிஐ அனுப்பிய 3வது சம்மன் குறித்து அதிரடி முடிவெடுப்பாரா தவெக தலைவர் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. நாளை மார்ச் 10ஆம் தேதி டெல்லி தலைமையகத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் சுமார் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

தற்போது மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ள சூழலில், நாளை அவர் நேரில் ஆஜராவாரா என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், தற்போதைய தகவல்களின்படி அவர் நாளை விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெற்று வரும் இந்த தீவிர விசாரணையில் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *