நேபாளத்தில் கோர விபத்து: 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 13 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

நேபாளத்தில் கோர விபத்து: 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 13 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

நேபாளத்தின் பைடாடி மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரகண்ட் எல்லைப் பகுதியில் பயணிகள் நிறைந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 34-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மலைப் பாதையில் சென்றபோது பேருந்தின் பிரஷர் பைப் உடைந்ததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நேபாள காவல்துறையும் மீட்புப் படையினரும் இரவு முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *