நேட்டோ பிடிவாதம் விலகியது: அமைதிக்காக புதிய நிபந்தனை விதித்த ஜெலென்ஸ்கி! அமெரிக்கா-ஐரோப்பாவிடம் பாதுகாப்பு உத்தரவாதம் கோரிக்கை

உக்ரைன் நேட்டோ இராணுவக் கூட்டணியில் இணைவதற்கான தனது நீண்டகால கோரிக்கையைக் கைவிட உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒப்புக்கொண்டுள்ளார். ரஷ்யா-உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தில் இது ஒரு பெரிய நகர்வாகும். இருப்பினும், இந்தச் சலுகைக்கு ஈடாக, உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து வலுவான பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி நிபந்தனை விதித்துள்ளார்.
அமெரிக்காவுடன் நேட்டோவின் ஆர்ட்டிக்கிள் 5-க்கு இணையான இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாதத்தை கியேவ் கோருகிறது என்று ஜெலென்ஸ்கி தெரிவித்தார். இதற்கிடையில், அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ரஷ்யாவிற்கு முன்வரிசைப் பகுதிகளை விட்டுக்கொடுக்க டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர்கள் உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். ஐரோப்பியத் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு திருத்தப்பட்ட திட்டங்களை அனுப்பியும் வாஷிங்டனிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.