நாடாளுமன்றத்திற்கு வர பிரதமர் அஞ்சுகிறார் என ராகுல் காந்தி கடும் தாக்கு
February 9, 2026

முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் புத்தகத்தை மேற்கோள் காட்டி நாடாளுமன்றத்தில் பேச அரசு அனுமதி மறுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உண்மையை எதிர்கொள்ள முடியாமல் பிரதமர் மோடி அவைக்கு வர அஞ்சுவதாகவும், எதிர்க்கட்சிகள் அச்சுறுத்துவதாகக் கூறுவது முற்றிலும் பொய் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமரைத் தாக்க முயன்றதாகக் கூறப்படும் புகாரில் உண்மையில்லை என்றும், அப்படி ஏதேனும் நடந்திருந்தால் உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் ராகுல் சவால் விடுத்தார். எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுவதாகவும், எட்டு உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.