நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கல பயணத்தை நேரலையில் காண புதிய வசதி

நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கல பயணத்தை நேரலையில் காண புதிய வசதி

நிலவை நோக்கிய நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கல பயணம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. ஓரியன் விண்கலத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் மேற்கொள்ளும் இந்த வரலாற்றுப் பயணத்தை பொதுமக்கள் நேரலையில் காண ‘ஆர்டெமிஸ் ரியல்-டைம் ஆர்பிட்’ என்ற புதிய இணையதளத்தை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. யூனிட்டி கேம் என்ஜின் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தின் மூலம் விண்கலத்தின் வேகம் மற்றும் இருப்பிடத்தை உடனுக்குடன் அறிய முடியும். மொபைல் பயனர்களுக்காக இதில் மேம்பட்ட ஏஆர் (AR) ட்ராக்கர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கமாண்டர் ரெய்ட் விஷ்மேன் தலைமையில் 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வில் விண்வெளி வீரர்கள் நிலவின் சுற்றுப்பாதையை சுற்றி வருவார்கள். விண்கலம் ஏவப்பட்ட ஒரு நிமிடத்திலிருந்தே அதன் சென்சார் தரவுகள் ஜான்சன் விண்வெளி மையம் வழியாக இணையதளத்தில் பதிவேற்றப்படும். இந்த குழுவினர் நிலவில் தரை இறங்க மாட்டார்கள் என்றாலும் வருங்கால நிலவு பயணங்களுக்கு தேவையான முக்கிய தரவுகளை சேகரிப்பார்கள். விண்வெளி அறிவியலின் இந்த வரலாற்று தருணத்தை அனைவரும் எளிதில் அணுகுவதே நாசாவின் இந்த முயற்சியின் நோக்கமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *