தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி மனு

தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி மனு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இன்று திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவுடன் சென்று தலைமைத் தேர்தல் ஆணையரை நேரில் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். மாநிலத்தின் தற்போதைய சூழலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய காரணமாகும்.

முன்னதாக ஜனவரி 10 ஆம் தேதி ஞானேஷ் குமாருக்கு முதல்வர் மம்தா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் தேர்தல் ஆணையம் மிகவும் உணர்வற்ற முறையில் நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது சட்ட ரீதியான போராட்டத்தின் மூலம் இதற்கு தீர்வு காண முதல்வர் மம்தா பானர்ஜி முனைப்பு காட்டி வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *