துளேயில் மூதாட்டி கொடூரக் கொலை வெறும் 24 மணிநேரத்தில் கொலையாளி கைது
December 18, 2025

மகாராஷ்டிர மாநிலம் துளேயில் 75 வயது மூதாட்டி லீலாபாய் சூர்யவன்ஷி தனது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். திங்கள்கிழமை காலை அவர் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளை முயற்சியின் போதே இந்த கொலை நடந்துள்ளது.
சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்கடிகாரத்தை வைத்து, 24 மணிநேரத்திற்குள் சாகர் ராஜு கோலி என்பவரை போலீசார் கைது செய்தனர். சிலிண்டரை திருடும்போது மூதாட்டி விழித்துக்கொண்டதால், அவரை தாக்கி கொலை செய்ததாக கைதான வாலிபர் ஒப்புக்கொண்டார்.