ஐரோப்பிய தலைவர்களை கடுமையாக விமர்சித்த புதின் போர் பதற்றம் அதிகரிப்பு
December 18, 2025

இந்தியப் பயணத்தை முடித்த கையோடு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஐரோப்பிய தலைவர்களை ‘சிறு பன்றிகள்’ என கடுமையாகச் சாடியுள்ளார். உக்ரைன் போரில் ரஷ்யாவின் அனைத்து இலக்குகளும் எவ்வித நிபந்தனையுமின்றி நிறைவேற்றப்படும் என பாதுகாப்பு அமைச்சகக் கூட்டத்தில் அவர் உறுதிபடத் தெரிவித்தார். அமெரிக்கா வேண்டுமென்றே இந்த மோதலைத் தூண்டிவிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ரஷ்யா தனது வரலாற்றுப் பகுதிகளைப் போர்க்களத்திலேயே மீட்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். இருப்பினும், நேட்டோ நாடுகளின் மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் ரஷ்யாவிற்கு இல்லை என்பதையும் புதின் இந்த உரையின் போது தெளிவுபடுத்தினார்.