துபாயில் கணவருடன் முதல் காதல் பயணம் ஆர்த்தி சிங்கின் வைரல் புகைப்படங்கள் இதோ

பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மருமகளும் சின்னத்திரை நடிகையுமான ஆர்த்தி சிங், தனது கணவர் தீபக் சவுகானுடன் முதன்முறையாக துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து மேற்கொள்ளும் முதல் துபாய் பயணம் இது என்பதால், அங்கு எடுக்கப்பட்ட நெருக்கமான புகைப்படங்களை ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக கணவரின் அரவணைப்பில் அவர் இருக்கும் புகைப்படங்களும், அவரின் வைர மங்கலசூத்திரமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தச் சுற்றுலாவின் போது எடுக்கப்பட்ட ஏழு புகைப்படங்கள் மற்றும் மூன்று வீடியோக்களைப் பகிர்ந்த ஆர்த்தி, துபாய் இவ்வளவு அழகாக இருக்கும் என்று தாம் நினைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். ஸ்டார்பக்ஸ் காபியை ருசிப்பது முதல் அழகான இடங்களில் போஸ் கொடுப்பது வரை இவர்களது ஒவ்வொரு அசைவும் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் பிரபலம் ஆர்த்தி சிங் கடந்த ஏப்ரல் மாதம் தீபக்கை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.