திருமணமான ஐந்தே நாட்களில் விபரீத முடிவு தேனியில் இளம்பெண் தற்கொலை
March 13, 2026

தேனி மாவட்டம் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (18) என்பவருக்கும் அவரது தாய்மாமன் முத்தீஸ்வரனுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயஸ்ரீ தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்த கூடலூர் போலீசார் உடலைக் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஜெயஸ்ரீயின் தந்தை மற்றும் கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில நாட்களிலேயே இச்சம்பவம் நடந்துள்ளதால், உத்தமபாளையம் கோட்டாட்சியர் (RDO) நாளை விரிவான விசாரணை நடத்த உள்ளார்.