திருமணமாகாத விரக்தியில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் கொலையாளி கைது
December 17, 2025

பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 40 வயது உபேந்திர ராம் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தனக்கு 40 வயதாகியும் திருமணமாகாத காரணத்தாலேயே இந்த செயலில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுமி தன்னை அடையாளம் காட்டிவிடுவார் என்ற பயத்தில் அவளைக் கொலை செய்ததாகக் குற்றவாளி ஒப்புக்கொண்டார்.
கோச்சிங் முடிந்து வீடு திரும்பிய சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சந்தேக நபரின் முகத்தில் இருந்த நகக்கீரல்கள் மற்றும் ரத்தக்கறை படிந்த ஆடைகளை வைத்து போலீஸார் அவரைக் கண்டறிந்தனர். இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.