திருப்பதி லட்டு தயாரிப்பில் நெய் தட்டுப்பாடு என பரவும் வதந்திகளுக்கு தேவஸ்தானம் அதிரடி விளக்கம்

திருமலை ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் தயாரிப்பதற்குத் தேவையான பசு நெய் தட்டுப்பாடின்றி இருப்பதாகவும், லட்டு தயாரிப்பு சீர்குலைந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெளிவுபடுத்தியுள்ளது. மூன்று வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து நெய் கொள்முதல் செய்யப்படுவதால் விநியோகச் சங்கிலியில் எந்த பாதிப்பும் இல்லை என நிர்வாகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஒரு நெய் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது உண்மைதான் என்றாலும், மற்ற நிறுவனங்களின் விநியோகம் தடையின்றி தொடர்வதால் லட்டு உற்பத்தியில் தொய்வு ஏற்படவில்லை. தற்போது ஏழு லட்சம் லட்டுகள் கையிருப்பில் உள்ள நிலையில், கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. எனவே, பக்தர்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.