தாய்வான் எல்லையில் சீனா போர் பயிற்சி இறையாண்மைக்கு ஆபத்து என தாய்வான் கடும் எச்சரிக்கை

தாய்வான் எல்லைக்கு அருகில் உள்ள ஐந்து முக்கிய பகுதிகளில் சீனா ‘ஜஸ்டிஸ் மிஷன் 2025’ என்ற பெயரில் பிரம்மாண்ட இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. டிசம்பர் 29 அன்று தொடங்கிய இந்தப் பயிற்சியில் நேரடி துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தப்படுகின்றன. தாய்வானின் சுதந்திர ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும், அந்நாட்டின் துறைமுகங்களை முற்றுகையிடும் சீன இராணுவத்தின் திறனைச் சோதிக்கவும் இந்தப் போர் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு தாய்வான் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தனது எல்லைகளில் இராணுவப் படைகளைக் குவித்துள்ளது. அமெரிக்கா தாய்வானுக்கு வழங்கிய ஆயுத உதவி மற்றும் ஜப்பானின் ஆதரவு நிலைப்பாட்டால் சீனா ஆத்திரமடைந்துள்ள நிலையில், இந்தப் போர் பயிற்சி ஆசியப் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது சீனா தடைகளை விதித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.