தாய்லாந்து புக்கெட் விமான நிலைய ஓடுதளம் திடீர் மூடல்

தாய்லாந்து புக்கெட் விமான நிலைய ஓடுதளம் திடீர் மூடல்

ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புக்கெட் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அதன் முன்சக்கரம் பழுதானது. இதனால் ஓடுதளத்தின் நடுவிலேயே விமானம் நின்றதால், மற்ற விமானங்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. விமானத்தை அகற்றும் பணி தீவிரமாக நடப்பதால் ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பழுதான விமானத்தை அகற்றிய பிறகு, இன்று மாலை 6 மணி அளவில் விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *