அன்புமணியால் தான் பாமக அங்கீகாரம் ரத்து ராமதாஸ் தாக்கல் செய்த அதிரடி பதில் மனு

அன்புமணியால் தான் பாமக அங்கீகாரம் ரத்து ராமதாஸ் தாக்கல் செய்த அதிரடி பதில் மனு

பாமகவின் அங்கீகாரம் ரத்தானதற்கு அன்புமணியின் மோசமான செயல்பாடுகளே காரணம் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி தற்போது கட்சியின் உறுப்பினர் கூட கிடையாது என்றும், தேர்தல் ஆணையத்தில் அவர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் ராமதாஸ் தனது 18 பக்க பதில் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அன்புமணி தரப்பு, ராமதாஸ் தன்னை தலைவராக அறிவித்துக் கொண்டது கட்சி விதிகளுக்கு எதிரானது என வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *