தர்மேந்திராவின் லோனாவ்லா பண்ணை வீடு அருங்காட்சியகமாக மாறுகிறதா ஹேமா மாலினி விளக்கம்

பாலிவுட் ஜாம்பவான் தர்மேந்திராவின் மறைவிற்குப் பிறகு, அவர் அதிகம் நேசித்த லோனாவ்லா பண்ணை வீட்டின் எதிர்காலம் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. தர்மேந்திரா தனது கடைசி நாட்களில் மும்பை வீட்டை விட இந்த பண்ணை வீட்டிலேயே தனது முதல் மனைவி பிரகாஷ் கவுர் மற்றும் பேரக்குழந்தைகளுடன் நேரத்தை செலவிட விரும்பினார். குடும்பங்களுக்குள் சொத்து தகராறு இருப்பதாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹேமா மாலினி, இரு குடும்ப பிள்ளைகளுக்கும் இடையே எப்போதும் நல்லுறவு நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பண்ணை வீட்டைப் பற்றி பேசிய ஹேமா, சன்னி தியோல் அந்த இடத்தை ஒரு அருங்காட்சியகமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தர்மேந்திராவின் நினைவுகளைப் போற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் நம்புகிறார். தனது தனிப்பட்ட இழப்பு குறித்துப் பேசிய அவர், பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்து நேரத்தைக் கழிப்பதாகவும், தர்மேந்திராவுடன் கழித்த தருணங்கள் தன்னை நெகிழ வைப்பதாகவும் உருக்கமாகத் தெரிவித்தார்.