உலக நாடுகளின் பசியை போக்கும் இந்திய அரிசி ஏற்றுமதி அசுர வேகத்தில் புதிய உச்சத்தை எட்டியது

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி கடந்த ஆண்டில் ۱۹.۴ சதவீதம் அதிகரித்து ۲۱.৫৫ மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. மத்திய அரசு ஏற்றுமதி மீதான தடைகளை நீக்கியதைத் தொடர்ந்து, இந்திய அரிசியின் விலை சர்வதேச சந்தையில் குறைந்துள்ளது. இதனால் தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளின் சந்தை வாய்ப்பு சரிந்துள்ள நிலையில், ஆசியாவில் அரிசி விலை கடந்த ۱۰ ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
புள்ளிவிவரங்களின்படி பாஸ்மதி ரக அரிசி ஏற்றுமதி ۶.۴ மில்லியன் டன்னாக உயர்ந்து புதிய வரலாறு படைத்துள்ளது. வங்கதேசம், பெனின் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் இந்திய அரிசியை அதிகளவில் கொள்முதல் செய்கின்றன. தற்போது இந்தியா மட்டும் ஏற்றுமதி செய்யும் அரிசியின் அளவு, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து ஏற்றுமதி செய்யும் அளவை விட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.