தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 7,611 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, 20 ஆண்டுகால காத்திருப்பிற்குப் பின் புத்துயிர் பெறும் முக்கிய வழித்தடங்கள்

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 7,611 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, 20 ஆண்டுகால காத்திருப்பிற்குப் பின் புத்துயிர் பெறும் முக்கிய வழித்தடங்கள்

தமிழகத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் 7,611 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 20 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த திண்டிவனம்-திருவண்ணாமலை மற்றும் ஸ்ரீபெரும்புதூர்-இருங்காட்டுக்கோட்டை போன்ற புதிய வழித்தட திட்டங்களை மீண்டும் செயல்படுத்த தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரையிலான சுமார் 71 கி.மீ நீளமுள்ள புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டால், விழுப்புரம் வழியாக செல்லும் பயண தூரம் 35 கி.மீ வரை குறையும். இது தவிர சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சுமார் 3,136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி இடையிலான 58 கி.மீ தூர ரயில் சேவை திட்டம் தொழில் வளர்ச்சிக்கும், புதிய விமான நிலைய போக்குவரத்துக்கும் பெரும் உதவியாக இருக்கும். அதேபோல் சென்னை-கடலூர் இடையிலான 180 கி.மீ கடற்கரை ரயில் பாதை திட்டமும் தற்போது மறுஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில் நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்தல் போன்ற பணிகளுக்காக ஏற்கனவே 35,701 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்தவுடன் அத்திப்பட்டு-புத்தூர் மற்றும் மன்னார்குடி-பட்டுக்கோட்டை போன்ற புதிய ரயில்வே பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *