தமிழகத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் நிலவுவதால் எண்ணெய் நிறுவனங்களுடன் அரசு அவசர ஆலோசனை
March 10, 2026

மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. சென்னை மணலி ஐ.ஓ.சி நிறுவனத்தில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதோடு, வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகமும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
நிலைமையை சீர்செய்ய எண்ணெய் நிறுவனங்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இனி சிலிண்டர் விநியோகிக்கப்பட்ட 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த முன்பதிவு செய்ய முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கையிருப்பிலுள்ள சிலிண்டர் விவரங்களை இன்று மதியத்திற்குள் சமர்ப்பிக்குமாறு தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.