டெல்லி ஹோட்டலின் 4வது மாடியிலிருந்து குதித்த இளம்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
February 14, 2026

காதலர் தினத்திற்கு முந்தைய நாள் டெல்லியின் விஸ்வாஸ் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது. தனது காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் 20 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டலின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அதிர்ஷ்டவசமாக கீழே இருந்த அட்டைப் பெட்டிகளின் மீது விழுந்ததால் அவர் உயிர் தப்பினார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது நிலை சீராக உள்ளது.
காதலர் தினத்தை கொண்டாடுவது தொடர்பாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அந்த இளைஞருக்கும் பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த இளைஞர் ஹோட்டலை விட்டு வெளியேறியதும் அந்த பெண் இந்த முடிவை எடுத்துள்ளார். போலீசார் பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.