ஜனவரி 1 முதல் உங்கள் பான் கார்டு செல்லாததாகிவிடும் ஆதார் உடன் இணைக்க இதுவே கடைசி வாய்ப்பு

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை மீண்டும் நினைவூட்டியுள்ளது. வரும் ஜனவரி 1, 2026-க்குள் இந்த இணைப்பை முடிக்காவிட்டால், உங்கள் பான் கார்டு ‘செயல்படாததாக’ அறிவிக்கப்படும். இதனால் வருமான வரி தாக்கல் செய்யவோ, நிலுவையில் உள்ள ரீஃபண்டுகளைப் பெறவோ முடியாது. மேலும், வங்கிக் கணக்கு தொடங்குதல் மற்றும் பங்குச் சந்தை முதலீடு போன்ற அத்தியாவசிய நிதிச் சேவைகளும் முடங்கும் அபாயம் உள்ளது.
பான் கார்டு செயலிழந்தால், பணப்பரிமாற்றங்களின் போது அதிகப்படியான டிடிஎஸ் வரி வசூலிக்கப்படும். உங்கள் கார்டு ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பதை வருமான வரித்துறையின் இணையதளத்தில் ‘Link Aadhaar Status’ மூலம் சரிபார்க்கலாம். ஒருவேளை இணைக்கப்படாமல் இருந்தால், 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி ஆன்லைன் மூலமாகவே உடனடியாக இணைக்க முடியும். தேவையற்ற நிதி நெருக்கடிகளைத் தவிர்க்க இந்த வாரமே இப்பணியை முடிப்பது அவசியமாகும்.