சௌரவ் கங்குலி பயோபிக் படப்பிடிப்பு தள்ளிவைப்பு ராஜ்குமார் ராவ் வருகை ரத்து

சௌரவ் கங்குலி பயோபிக் படப்பிடிப்பு தள்ளிவைப்பு ராஜ்குமார் ராவ் வருகை ரத்து

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படப்பிடிப்பு மீண்டும் தள்ளிப்போயுள்ளது. மார்ச் 16 முதல் கொல்கத்தாவில் தொடங்கவிருந்த படப்பிடிப்பு தற்போது ஏப்ரல் பாதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தாதாவின் நுணுக்கங்களைக் கற்க நடிகர் ராஜ்குமார் ராவ் கொல்கத்தா வரவிருந்த நிலையில் அந்தத் திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈடன் கார்டனில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்க வாய்ப்புள்ளது. இயக்குனர் விக்ரமாதித்ய மோத்வானே கூடுதல் கால அவகாசம் எடுத்துக்கொண்டு பணிகளைத் திட்டமிடுகிறார். கங்குலி தற்போது ஒரு ரியாலிட்டி ஷோவில் பிஸியாக இருக்கும் நிலையில் படப்பிடிப்பு தாமதம் குறித்து அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *