ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைக்கும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய சிறப்புப் படைகள்

ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைக்கும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய சிறப்புப் படைகள்

ஈரானின் ரகசிய அணுசக்தி மையங்கள் மற்றும் உயர்மட்டத் தலைவர்களின் பதுங்கு குழிகளை அழிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பாரிய தரைவழித் தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளார். இதில் அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘நேவி சீல்’ மற்றும் ‘டெல்டா ஃபோர்ஸ்’ ஆகியவற்றுடன் இஸ்ரேலின் ‘சயரத் மத்கல்’ படையும் இணைந்து செயல்படவுள்ளது. அதீத பாதுகாப்பு கொண்ட நடான்ஸ் போன்ற மலைப்பகுதி பதுங்கு குழிகளுக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்த இந்த அதிரடிப் படைகள் தற்போது தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

நவீன ட்ரோன்கள் மற்றும் இரவு நேரத்திலும் துல்லியமாகப் பார்க்கும் கருவிகளுடன் கூடிய இந்தச் சிறப்புப் படைகள், எதிரி எல்லைக்குள் புகுந்து இலக்குகளை அழிப்பதில் வல்லமை பெற்றவை. ஒசாமா பின்லேடனை வதம் செய்த அனுபவம் கொண்ட இந்த வீரர்களின் நகர்வு, மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை ஈரானின் எதிர்கால அரசியல் சூழலில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது குறித்த விவாதங்கள் உலகளவில் தற்போது எழுந்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *