சொந்த அண்ணன் மகனுடன் மனைவியை பார்த்த அதிர்ச்சி கணவன் எடுத்த விபரீத முடிவு

சொந்த அண்ணன் மகனுடன் மனைவியை பார்த்த அதிர்ச்சி கணவன் எடுத்த விபரீத முடிவு

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள நாகேஷ்வர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. லால்ஜி என்பவர் தனது மனைவி திரிஷா மற்றும் தனது சொந்த அண்ணன் மகன் விஷால் ஆகிய இருவரும் நெருக்கமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலால், திரிஷா வீட்டை விட்டு வெளியேறி தனது தோழியுடன் வசிக்கத் தொடங்கினார்.

லால்ஜி தனது சொத்துக்களை மனைவியின் பெயரில் எழுதி வைத்து மீண்டும் இணைந்து வாழ விரும்பினார். ஆனால் விஷால் மற்றும் தோழியின் தூண்டுதலால் திரிஷா வர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த லால்ஜி, மனைவியைச் சுட்டுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். தற்போது திரிஷா கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *