சென்னை பாஸ்தா மோதலா கொலை வழக்கில் திடீர் திருப்பம் பிரேத பரிசோதனை முடிவில் வெளியான உண்மை

சென்னை பாஸ்தா மோதலா கொலை வழக்கில் திடீர் திருப்பம் பிரேத பரிசோதனை முடிவில் வெளியான உண்மை

சென்னையில் பீகாரைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு வயது குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் பாலியல் வன்கொடுமை முயற்சியால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை ஏதும் நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதே அந்த பெண்ணின் மரணத்திற்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கு பிறகு குற்றவாளிகள் மூன்று பேரின் உடல்களையும் தனித்தனி பைகளில் கட்டி அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட இடங்களில் வீசியுள்ளனர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு உடல்களை மீட்ட போலீசார், தலைமறைவாக இருந்த மூன்று குற்றவாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ஒரு குடும்பத்தையே அழித்த இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *