சென்னையில் அறிமுகமானது நவீன சொகுசு ஏசி மின்சார பேருந்து சேவை

சென்னையில் அறிமுகமானது நவீன சொகுசு ஏசி மின்சார பேருந்து சேவை

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்க புதிய ‘பிரீமியம்’ ஏசி மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம் செய்யப்பட்டன. இந்த சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார். லோ-புளோர் வசதி, சொகுசு இருக்கைகள் மற்றும் மொபைல் சார்ஜிங் போர்ட்கள் எனப் பல்வேறு நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்துகள், ஐடி ஊழியர்கள் மற்றும் தினசரி பயணிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

இந்த பேருந்துகளில் பயணிக்க ‘சென்னை ஒன்’ செயலி மூலம் மட்டுமே இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக சிறுசேரி ஐடி பார்க் – கோயம்பேடு மற்றும் திருவான்மியூர் – கிளாம்பாக்கம் ஆகிய முக்கிய வழித்தடங்களில் இந்தச் சேவை இயக்கப்படுகிறது. குறைந்த நிறுத்தங்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட வசதி காரணமாக, சொந்த வாகனங்களைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *