உலகெங்கும் பரவிய ரகசிய சிக்னல், ஈரானின் ஸ்லீப்பர் செல்களுக்கு சென்ற மெசேஜால் அமெரிக்கா அதிர்ச்சி

உலகெங்கும் பரவிய ரகசிய சிக்னல், ஈரானின் ஸ்லீப்பர் செல்களுக்கு சென்ற மெசேஜால் அமெரிக்கா அதிர்ச்சி

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிலிருந்து உலகெங்கும் உள்ள ஸ்லீப்பர் செல்களுக்கு ரகசிய ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்ட தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்க உளவுத்துறை இந்த சிக்னல்களை இடைமறித்தாலும், அதன் பின்னணியில் உள்ள மர்மத்தை உடைக்க முடியாமல் தவிக்கிறது. டிஜிட்டல் தடயங்கள் ஏதுமின்றி அனுப்பப்பட்ட இந்த மெசேஜ்கள் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.

பிப்ரவரி இறுதியில் ஈரானிய தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், இந்த புதிய ரகசிய சிக்னல் உலகளாவிய தாக்குதலுக்கான அறிகுறியோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஏஜெண்டுகள் தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *