சீனாவுக்கு செக்! வங்கதேசத்தில் டிரம்பின் அதிரடி ஆட்டம்

டாக்கா: வங்கதேசத்தில் சீன டிரோன் தொழிற்சாலை மற்றும் பாகிஸ்தான் போர்விமானங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது தெற்காசியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பெய்ஜிங்கின் இந்த ஊடுருவலை முறியடிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது ஒரு மெகா திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
வங்கதேசத்தின் இறையாண்மையை காக்கவும், பிராந்தியத்தில் அதிகார சமநிலையை நிலைநாட்டவும் டாக்காவுக்கு அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்க வாஷிங்டன் முன்வந்துள்ளது. இது குறித்து அமெரிக்க தூதர் ப்ரெண்ட் டி. கிறிஸ்டென்சன் கூறுகையில், “வங்கதேசத்தின் ராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய பென்டகன் மாற்று வழிகளை உருவாக்க தயாராக உள்ளது” என்றார்.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை சீனாவின் பிடியிலிருந்து வங்கதேசத்தை விடுவிப்பது மட்டுமின்றி, இந்தியா-வங்கதேச உறவை மேலும் வலுப்படுத்தி அமைதியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிந்தைய புதிய அரசுடன் முதலீடு மற்றும் வர்த்தக ரீதியான உறவை மேம்படுத்தவும் அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது.