சமையல் எண்ணெயில் கலந்திருக்கும் விஷம்! லட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கும் அபாயம்

செய்தி பிரிவு : நாம் அன்றாடம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட (Refined Oil) எண்ணெய் மனித உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கேரள ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தின் ஆய்வின்படி, இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணெய் டிஎன்ஏ-வை பாதிப்பதோடு, மாரடைப்பு, புற்றுநோய், நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களை உண்டாக்குகிறது. மேலும், இது ஆண்களுக்கு மலட்டுத்தன்மை மற்றும் சிறுநீரகக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த எண்ணெய் தயாரிக்கப்படும் விதம் மிகவும் ஆபத்தானது. எண்ணெயின் நிறம் மற்றும் வாசனையை நீக்க காஸ்டிக் சோடா மற்றும் கந்தகம் போன்ற நச்சு அமிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சுத்திகரிப்பு செயல்பாட்டின் போது வெளியேறும் கழிவுகள் டயர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய வேதிப்பொருட்கள் கலந்த எண்ணெய் எலும்புகளை பலவீனப்படுத்தி கண்பார்வையையும் பாதிக்கிறது. எனவே, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சமையல் எண்ணெய் விஷயத்தில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.