சத்தீஸ்கரில் நிலத்தை பிளந்து கொண்டு வெளியேறிய நீர் சுனாமி போல மிரட்டும் சிசிடிவி காட்சி

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியின் போது ஒரு பயங்கரமான விபத்து நிகழ்ந்துள்ளது. ஒரு காலி இடத்தில் கனரக இயந்திரங்கள் மூலம் போர்வெல் தோண்டப்பட்ட போது, நிலத்தடியில் ஏற்பட்ட கடும் அழுத்தம் காரணமாக அருகில் இருந்த வீட்டின் குழாய் வெடித்தது. ஜனவரி 29 இரவு நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சுனாமி போன்ற வேகத்தில் பரவி வருகிறது.
வீடியோவில் திடீரென நிலம் பிளந்து தண்ணீர் அதிவேகமாக மேலே பீய்ச்சி அடிப்பதை காண முடிகிறது. நீரின் வேகம் எந்த அளவுக்கு இருந்ததென்றால், அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆழ்துளை கிணறு அமைக்கும் போது முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் கட்டுமானப் பணிகளின் போது அண்டை வீடுகளின் நிலத்தடி அமைப்புகளைக் கருத்தில் கொள்வதன் அவசியத்தை உணர்த்துகிறது.