ஆப்கானிஸ்தானுக்கு வாரி வழங்கும் இந்தியா, வங்கதேசத்திற்கான நிதி பாதியாகக் குறைப்பு

ஆப்கானிஸ்தானுக்கு வாரி வழங்கும் இந்தியா, வங்கதேசத்திற்கான நிதி பாதியாகக் குறைப்பு

மத்திய அரசின் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அண்டை நாடுகளுக்கான நிதியுதவி விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் வங்கதேசத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது; அந்நாட்டிற்கான நிதி 120 கோடி ரூபாயிலிருந்து 60 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான தற்போதைய ராஜதந்திர உறவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே இந்த நிதிக்குறைப்பு காட்டுவதாகக் கருதப்படுகிறது.

அதேவேளையில், ஆப்கானிஸ்தானுக்கான நிதியுதவியை 100 கோடி ரூபாயிலிருந்து 150 கோடி ரூபாயாக இந்தியா உயர்த்தியுள்ளது. இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடான பூட்டான் 2,288 கோடி ரூபாயுடன் அதிகபட்ச நிதியைப் பெறுகிறது. மேலும், நேபாளத்திற்கான நிதியுதவி 800 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *