கூடுதல் சர்வதேச விமானங்களுக்கு அதானி குழுமம் கோரிக்கை முட்டுக்கட்டை போடும் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ

கூடுதல் சர்வதேச விமானங்களுக்கு அதானி குழுமம் கோரிக்கை முட்டுக்கட்டை போடும் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ

இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இருதரப்பு பறக்கும் உரிமைகள் தொடர்பாக புதிய மோதல் வெடித்துள்ளது. தான் நிர்வகிக்கும் 8 விமான நிலையங்களில் சர்வதேச போக்குவரத்தை அதிகரிக்க, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் மற்றும் கத்தார் போன்ற நாடுகளுடன் கூடுதல் விமான சேவைகளுக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு மத்திய அரசை அதானி ஏர்போர்ட்ஸ் வலியுறுத்தியுள்ளது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் விமான நிலைய உள்கட்டமைப்பில் 11.1 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், சர்வதேச விமானங்கள் அதிகரிக்காவிட்டால் இந்த முதலீடு வீணாகும் என்றும் பயணிகளுக்கு டிக்கெட் விலை உயரும் என்றும் அதானி தரப்பு வாதிடுகிறது.

இருப்பினும், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் இந்த கோரிக்கையை கடுமையாக எதிர்க்கின்றன. வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு கூடுதல் உரிமைகளை வழங்குவது உள்நாட்டு நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இது ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கும் என்றும் அவை கருதுகின்றன. இந்திய விமான நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட திறனில் 80 சதவீதத்தைப் பயன்படுத்தாதவரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கூடுதல் அனுமதி வழங்கக்கூடாது என்பதே தற்போதைய அரசின் கொள்கையாக உள்ளது. அதானி குழுமத்தின் விரிவாக்கத் திட்டம் மற்றும் உள்நாட்டு விமான நிறுவனங்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *