குறுக்கு வழி என்று கூறி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், ராபிடோ பைக் ஓட்டுநரின் பகீர் செயல்

குறுக்கு வழி என்று கூறி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், ராபிடோ பைக் ஓட்டுநரின் பகீர் செயல்

மும்பையின் கல்யாண் பகுதியில் ஜிம்மிற்குச் சென்ற 26 வயது இளம்பெண், ராபிடோ பைக் ஓட்டுநரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைக்கை முன்பதிவு செய்த அந்தப் பெண் பயணிக்கையில், ஓட்டுநரான சித்தேஷ் திடீரென ஆள்நடமாட்டமற்ற இருட்டுப் பகுதிக்கு வாகனத்தைத் திருப்பியுள்ளார். அங்கு அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து அநாகரீகமாக நடந்துகொண்டதுடன், அவரிடமிருந்த பணத்தையும் பறித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், 19 வயது இளைஞனைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த இளைஞன் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர் எனத் தெரியவந்துள்ளது. நீதிமன்றம் அவரை டிசம்பர் 18 வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் செயலி வழி வாகனச் சேவையைப் பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *