இன்று தொடங்கும் ஐபிஎல் ஏலம் மோதுவது யார்
December 17, 2025

ஐபிஎல் மினி ஏலம் இன்று செவ்வாய்க்கிழமை அபுதாபியில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு இந்த ஏலம் நேரலையாக ஒளிபரப்பப்படும். ஏலம் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு பிசிசிஐ திடீரென மேலும் 19 வீரர்களை பட்டியலில் சேர்த்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது ஏலத்தில் பங்கேற்கும் மொத்த வீரர்களின் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுக்கத் தயாராக உள்ளனர். அபுதாபியில் இன்று நடைபெறும் இந்த விறுவிறுப்பான ஏலத்தைக் காண ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.