குடியரசுத் தலைவருக்கு அவமரியாதை விவகாரத்தில் மோடியை நோக்கி கேள்வி எழுப்பிய மம்தா
March 9, 2026

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஒரு புகைப்படத்தை ஆதாரமாகக் காட்டி பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாகச் சாடியுள்ளார். குடியரசுத் தலைவர் நின்றுகொண்டிருக்கையில் பிரதமர் மட்டும் ஏன் அமர்ந்திருந்தார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் குளறுபடிகளுக்கு மாநில அரசு பொறுப்பல்ல என்று மம்தா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதற்கான முழுப் பொறுப்பையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளே ஏற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். மம்தாவின் இந்த அதிரடி கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.