கள்ளக்காதலனுடன் சிக்கிய மருமகள் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்காதலனுடன் சிக்கிய மருமகள் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் கள்ளக்காதலை மறைக்க மாமியாரை மருமகள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹசன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜைனப் என்ற பெண், தனது கணவர் வெளியூரில் இருக்கும் வேளையில் பக்கத்து வீட்டு மெஹர் அலி என்பவருடன் பழகி வந்துள்ளார். கடந்த டிசம்பர் 18-ம் தேதி இரவு, இவர்கள் இருவரும் வீட்டில் நெருக்கமாக இருந்ததை ஜைனப்பின் மாமியார் ஷமீமா நேரில் பார்த்துள்ளார். இந்த விவகாரத்தை மகனிடம் கூறிவிடுவார் என்ற பயத்தில், ஜைனப் தனது காதலனுடன் சேர்ந்து ஷமீமாவின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

மறுநாள் காலை சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதில் மருமகள் ஜைனப் மீது சந்தேகம் வலுத்த நிலையில், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தப்பியோட முயன்ற ஜைனப் மற்றும் அவரது காதலன் மெஹர் அலியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொடூரக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *