ஓய்வுபெறும் நேரத்தில் தீர்ப்புகளை வாரி வழங்கும் நீதிபதிகள் குறித்து உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக நீதிபதிகள் பல தீர்ப்புகளை வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவரின் வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த நிலையை கிரிக்கெட் போட்டியின் கடைசி ஓவரில் சிக்ஸர்களை விளாசும் பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிட்டது. இத்தகைய போக்கு நீதித்துறையில் துரதிர்ஷ்டவசமானது என்று நீதிபதிகள் சூரிய காந்த் தலைமையிலான அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கியதற்காக அந்த நீதிபதி ஓய்வு பெறுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் நேரடியாக தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்ட நீதிபதி உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், அவரது மனுவை நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.