ஓமன் கடல் பகுதியில் குஜராத் நோக்கி வந்த கப்பல் மீது வான்வழித் தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து குஜராத் நோக்கிச் சென்ற ‘மயூரி நாரி’ என்ற தாய்லாந்து சரக்குக் கப்பல் மீது ஓமன் கடல் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலால் கப்பலில் தீப்பற்றியதை அடுத்து, ஓமன் கடற்படையினர் விரைந்து செயல்பட்டு 20 ஊழியர்களைப் பாதுகாப்பாக மீட்டனர். எனினும், கப்பலுக்குள் இன்னும் மூன்று பேர் சிக்கியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தச் சம்பவத்தால் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் 28 இந்தியக் கப்பல்களும் 778 ஊழியர்களும் சிக்கியுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு, ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. மேற்கு ஆசியாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் எரிபொருள் இறக்குமதியில் இந்த மோதல் சூழல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் நிலைமையைக் கண்காணித்து வருகிறது.